#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கு மட்டும் ஏன் நடக்கல..." பொறியியல் பட்டதாரி எடுத்த கொடூர முடிவு.!!
சென்னை அருகே தனக்குப் பார்த்த வரன்கள் தள்ளிப் போனதால் விரக்தி அடைந்த 28 வயது பொறியியல் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரன் அமைவதில் தாமதம்
சென்னையை அடுத்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர். 28 வயதான இவர் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். சென்னையில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்த்திருக்கின்றனர். ஆனால் வரன் சரியாக அமையவில்லை. இதனால் திருமணம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
மன விரக்தியில் ராஜினாமா
பல இடங்களில் பெண் தேடியும் ராஜசேகருக்கு நல்ல வரன் அமையவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தடைப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ராஜசேகர். மேலும் இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வேலையையும் அவர் ராஜினாமா செய்து விட்டு திண்டிவனம் திரும்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: "தீபாவளிக்கு வீட்டுக்கு வாயா மஜாவா இருக்கலாம்.." ஓனருடன் கள்ளக்காதல்.!! கணவன் கொலை.!!
கழுத்தை அறுத்து தற்கொலை
இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய ராஜசேகர் பெண் கிடைக்காத விரக்தியில் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டின் அருகே இருந்த வாழைத் தோட்டத்திற்கு சென்ற அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "துரோகத்திற்கு தண்டனை மரணம்.." வக்கீல் எரித்து கொலை.!! சரணடைந்த குற்றவாளி.!!