மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மயங்கிய பெண்ணை அவதூறாக பேசி கொடுமைப்படுத்திய அதிமுக நிர்வாகி தலைமறைவு; காவல்துறை வலைவீச்சு.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, பூதப்பாடி, சமத்துவபுரம் காலனியில் வசித்து வரும் பெண்மணி சித்ரா (வயது 39). இவர் கூலித்தொழிலாளி ஆவார். பூதப்பாடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு சம்பவத்தன்று நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம், அங்கு ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் மயக்கமடைந்தார். இதனைக்கண்ட அந்நிறுவன உரிமையாளர் & அதிமுக பிரமுகர் கவின், மயங்கிய சித்ராவை அவதூறான வார்த்தையால் பேசி, அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.
இதனால் காயமடைந்த சித்ரா அந்தியூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின் சித்ரா அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து கவினின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், எஸ்.எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.