மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்வில் தோல்வியுற்றதால் சோகம்; கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, மொடச்சூர் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ்குமார் (வயது 45). மனைவி பிரியா (வயது 40). தம்பதிகளுக்கு ஜோசிகா என்ற 19 வயது மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில், ஒரு பாடத்தில் தோல்வியுற்றதாக தெரியவருகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். தனது மகளின் வருத்தத்தை புரிந்த பெற்றோர், ஆறுதல் கூறி மனதை தேற்றியுள்ளனர்.
தேர்வில் தோல்வியுற்ற விரக்தியால் கல்லூரிக்கும் செல்லாமல் இருந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த ஜோஷிகா, சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலைக்குச்சென்ற தாய் வீட்டிற்கு வந்து மகள் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.