மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொத்து பரோட்டாவுக்காக ஹோட்டல் ஓனரின் மண்டையை உடைத்த ஆயுதப்படை காவலர்.!
உணவகத்தில் கொத்து பரோட்டா கேட்டு உணவக உரிமையாளரின் மண்டையை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேர் கைதாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவில் இவரின் கடைக்கு சென்ற இரண்டு பேர் கொத்து பரோட்டா கேட்டுள்ளனர்.
ஆனால், பரோட்டா அப்போது தீர்ந்துபோனதால், தோசை மட்டுமே சாப்பிட இருப்பதாக மாஸ்டர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரில் ஒருவர், தன்னை காவல் துறை அதிகாரியின் தம்பி என்று கூறியுள்ளார்.
பின்னர், ஆயுதப்படை காவல் அதிகாரியான உமர் பருக்கை போனில் தொடர்பு கொண்ட கும்பல், உணவகத்தில் என்னை தங்கிவிட்டனர் என்று பொய் கூறியுள்ளார். சகோதரர் உண்மையில் தாக்கப்பட்டுவிட்டார் என்று ஆத்திரத்தில் வந்த உமர் பரூக், உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார்.
இதனால் ஈஸ்வரனின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உணவக உரிமையாளர் ஈஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஆயுதப்படை காவல் அதிகாரி உமர் பரூக் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.