ஈரோட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் கைது.. பல்வேறு திட்டங்களுக்கு தயார் நிலை., பதைபதைக்க வைக்கும் தகவல்.!



Erode ISIS Terrorist Organization Member Arrested by Local cops and NIA

பெங்களூரில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்ட நிலையில், அவனிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து ஈரோட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், திலக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 24 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்பர் உசேன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் சேலத்தில் பதுங்கியிருந்த அப்துல் அலி ஜீபா என்பவரும் கைது செய்யப்பட்டார். 

விசாரணையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆசிப் முசாப்தீன் மற்றும் அஹ்ரகாரம் பகுதியை சேர்ந்த அவன் நண்பர் யாசின் ஆகியோரின் வீடு சோதனை செய்யப்பட்டது. வீட்டில் இருந்த செல்போன், லேப்டாப், டைரி போன்றவையும் கைப்பற்றப்பட்டன. 

இவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின்படி ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், அவ்வியக்கத்தின் உறுப்பினராக இருக்கும் ஆசிப் இந்தியாவிற்கு எதிரான பல்வேறு சதித்திட்டங்களுக்கு வழிவகை செய்துகொடுத்து இருப்பதும் தெரியவந்தது. 

கைதுக்கு பின் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிப்பிடம் அதிகாரிகள் தஹாட்டர் விசாரணை நடத்தி வருகின்றனர். டைல்ஸ் விற்பனை செய்யும் வியாபாரி போல உள்ளுரில் பிழைப்பு நடத்தி வந்த ஆசிப், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது அப்பகுதி வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.