மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் தோல்வியால் வாயில் சாணிப்பவுடர் வாசனை., தந்தையின் தலையில் இடியை இறக்கிய மகன்.. பறிபோன உயிர்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர், கருக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவர் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, விஜய் மதியம் 1 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
விஜயை அவரின் தந்தை வேலுசாமி அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த நிலையில், வீட்டின் அருகே விஜய் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரின் மீது சாணி பவுடர் வாசனையும் அடித்துள்ளது. சுதாரித்துக்கொண்ட தந்தை என்னவென்று விசாரணை செய்துள்ளார்.
அப்போது, நான் பெண்ணை காதலித்து வந்தேன். எனக்கு தற்போது திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்கைக்கு திருமணம் ஆகாததால் திருமணம் செய்ய இயலாது. அதனால் சாணி பவுடரை குடித்துள்ளேன். பிளேடால் கழுத்து மற்றும் மணிக்கட்டை அறுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை வேலுசாமி, மகனை 108 அவசர ஊர்தி மூலமாக மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக விஜயின் தந்தை வேலுசாமி கொடுத்த புகாரின் பேரில், நம்பியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.