மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லைக்குக்கு ஆசைப்பட்டு வனவிலங்குகளுக்கு உணவளித்தால் சட்ட நடவடிக்கை - சத்தியமங்கலம் வனச்சரக அதிகாரி எச்சரிக்கை.!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனச்சரக அதிகாரி, பொதுமக்கள் வனவிலங்குகளுக்கு உணவளிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, உணவு வழங்க கூடாது என எச்சரித்து இருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லலாம். இவ்வழி காட்டுப்பகுதியாக மலை வழியே செல்வதாலும், இது புலிகள் உலாவும் வனச்சரக பகுதி என்பதாலும் யானை, சிறுத்தை, மான் போன்ற பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளன.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளான மான், யானை போன்ற விலங்குகளுக்கு தங்களால் இயன்ற உணவு என பிஸ்கட், சிப்ஸ் போன்று பல்வேறு உணவுகளை வழங்கி வருகின்றனர். யானைகளுக்கு லாரி ஓட்டுனர்கள் தன்னிச்சையாக வாகனத்தை நிறுத்தி கரும்பை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான செயல்களால் வனவிலங்குகளின் வாழ்க்கை முறைகள் மாறுபடும், தார்சாலை அருகே இருந்தால் மனிதர்கள் உணவு வழங்குவார்கள் என்ற எண்ணத்திற்கு விலங்குகள் வந்துவிடும். இதனால் அவைகளுக்கு கேடு மட்டுமே ஏற்படும். மனிதர்கள் வனவிலங்களுக்கு உணவு அளித்தால், அவைகள் காட்டுக்குள் செல்ல மறுத்து, ஒரு சமயத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தலாம்.
யானைகள் போன்று பெரிய விலங்காக இருந்தால், உணவுக்காக ஒவ்வொரு வாகனத்தையும் வழிமறித்து பிரச்சனை செய்துவிடும். காட்டுக்குள் விலங்குகள் செல்லவில்லை என்றால், எதிர்காலத்தில் அவைகளின் வாழ்க்கை முறை மாறும்.
சில சிறிய விலங்குகள் சாலைகளில் காத்திருந்து, வாகனத்தில் அடிபட்டு இறக்கும் சூழல் ஏற்படும் என எச்சரித்துள்ள வனச்சரக அதிகாரி, வனவிலங்குகளுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரித்து இருக்கிறார்.