மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிராம நிர்வாக அலுவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. காரணம் என்ன.?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வெள்ளாளபாளையம் பகுதியில் பசித்து வந்தவர் செந்தில்குமார். இவர் ஒரிச்சேரி புதூர் கிராம நிர்வாக அலுவலராக பதவி வகித்து வந்துள்ளார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதியிருக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை.
இதில் செந்தில் குமார் குடும்ப பிரச்சினை காரணமாகவும், கடன் தொல்லையாலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தி அடைந்த செந்தில்குமார் தனது பெரியம்மாள் மகளான ரம்யாவிடம் கடைசியாக பேசிய போது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த ரம்யா மீண்டும் அந்த செல்போன் எண்ணுக்கு கால் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனிடையே செந்தில்குமார் அந்த வழியாக வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்தார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.