மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறப்பிலும் ஓர் பிறப்பு..சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த தூய்மை பணியாளரின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு சார்பில் அஞ்சலி..!
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த மாரியப்பன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாரியப்பன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து மாரியப்பனின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி மாரியப்பனின் சிறுநீரகம், கல்லீரல், கண் கருவிழி உட்பட 5 உறுப்புகள் எடுக்கப்பட்டு திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் மாரியப்பனின் உடலுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மாரியப்பனின் உடலானது காவல்துறை பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அங்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.