மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாமீனில் வந்த உடன் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி!.. கள்ளக்காதலியுடன் முன்னாள் காதலன் கைது..!
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்கிற 19 வயது இளைஞருக்கும் கடந்த இரண்டு இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.
இது பற்றி தெரிந்ததும் பெண்ணின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் மோகன் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு உடுமலையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஐந்து மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதால், அந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மதியம் வீட்டில் வைத்திருந்த வாளியில் இருந்த தண்ணீரில் இரண்டு வயது சிறுவன் தினேஷ் தவறி விழுந்து விட்டதாக கூறி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அந்த பெண். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் இது குறித்து குண்டடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
குழந்தையை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து சந்தேக மரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தை தினேஷின் தாயிடம் விசாரணை செய்தனர். அப்போது தினேஷின் தாயும் அவரது கணவர் மோகன்ராஜும் திட்டமிட்டு குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜாமீனில் வெளியே வந்த காதலன் மோகன்ராஜ் மீண்டும் காதலியுடன் பழகி வந்துள்ளார். வழக்கிற்கும் இருவரது தொடர்புக்கும் இடையூறாக குழந்தை இருப்பதாக நினைத்து இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.