வெட்கக் கேடு.. வைரலான அமைச்சரின் வீடியோ.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு டுவிட்.!
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார்.
அங்குள்ள உப்பங்கழி ஏரியில், மண் அரிப்பு ஏற்படுவது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் கரைக்கு திரும்பிய படகில் இருந்து அனைவரும் கீழே இறங்கிய நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும் தண்ணீரில் கால் வைக்க தயங்கியநிலையில், அருகில் இருந்த மீனவர் ஒருவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்துள்ளார்.
பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்..
— DJayakumar (@offiofDJ) July 8, 2021
கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு... pic.twitter.com/Vj7lXnEN4Z
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது, இந்நிலையில், இதுகுறித்து தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம். கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு." என்று தெரிவித்துள்ளார்.