மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு..!
முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வர பட்டது . இந்த காலை உணவு திட்டமானதினால் ஏற்பட்டுள்ள பயனால் தமிழ்நாட்டின் அனைத்து தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவியர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்ற வகையில் இத்திட்டத்தினை விரிவுபடுத்தப்படும் என்னும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த உத்தரவை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.
இதன் அடிப்படியில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் செயல்படுகின்ற மொத்தம் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவர்.