மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெகுநேரமாக சாலையில் நின்ற கார்.! சடலமாக கிடந்த மூவர்.! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் ஓடை பகுதியில் கார் ஒன்று வெகுநேரமாக நின்றுக் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காரில் பார்த்தபோது வாயில் நுரை தள்ளியநிலையில் மூன்று பேர் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளனர். உடனே அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கார் கதவை உடைத்து, பார்த்ததில் மூவரும் உயிரிழந்து கிடக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
காரில் சடலமாக கிடந்த குடும்பத்தினர்
அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் கேரள மாநிலம், கோட்டயம், புதுப்பள்ளியைச் சேர்ந்த ஜார்ஜ் சக்கரியா (60), மனைவி மெர்சி (58) அவரது மகன் அகில் (29) என்பது தெரிய வந்துள்ளது. ஜார்ஜ் கோட்டயம் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் பல இடங்களில் கடன் வாங்கிய நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்.! மூன்று வாகனங்கள் அடுத்தடுத்ததாக மோதி கோர விபத்து!!
கடன் நெருக்கடி
மேலும் மன உளைச்சலில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கம்பம் சேனை ஓடை அருகே காரிலேயே பூச்சி மருந்தை வாங்கிவந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: திடீரென கதவை தட்டிய கணவன்.! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கொடூரம்!!