தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கட்டாய பாஸ்டேக் நடைமுறை ஒத்திவைப்பு.! எத்தனை நாட்களுக்கு தெரியுமா.?
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு, பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. பாஸ்டேக் இல்லாாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கட்டாய பாஸ்டேக் நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கட்டாய பாஸ்டேக் முறையை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தள்ளிவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சவாடிகளில் நாள்தோறும் 60 லட்சம் வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் 85 விழுக்காடு வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.