#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது அருகில் உறங்கிய மகளை காணோம் என கதறிய தந்தை.! போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக்கிங் தகவல்.!
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு மூன்றாம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்கள் ஒரு வேளை உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள பழங்குடி கிராமம் ஒன்றை சேர்ந்த விவசாயி ஜீவா. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு நாள் நள்ளிரவில் ஜீவாவின் அருகில் உறங்கிய குழந்தையை காணோம் என கதறியுள்ளார். அதனை அடுத்து போலீசார் வந்து தேடிய போது ஜீவாவின் வீட்டிற்கு அருகிலேயே குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு கிடந்துள்ளது.
அதனை அடுத்து போலீசார் ஜீவாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஜீவாவிற்கு அதிகப்படியான பண பிரச்சனை இருந்துள்ளது. மேலும் மூன்று குழந்தைகள் என்பதால் ஒரு வேளை உணவிற்கே சிரமப்பட்டு வந்துள்ளார்.
அதனால் ஒரு குழந்தையை கொலை செய்து விட்டால் மற்ற இரண்டு குழந்தைகளுக்காவது உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் குழந்தையை கொலை செய்ததாக ஜீவா கூறியுள்ளார். வறுமையின் காரணமாக பெற்ற மகளையே கொடூர கொலை செய்த தந்தையின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.