நடிகையை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்; அதிரடி காட்டிய காவல்துறை.!
மனைவி அந்த பக்கம்.. நள்ளிரவில் மருமகளிடம் இச்சையை தீர்த்து கொண்ட மாமனார்.. பெண் அதிரடி நடவடிக்கை.!
அழகான குடும்பம் :
சேலம் மாவட்டத்தின் வெட்டுக்காடு என்ற பகுதியில் ராஜி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு 65 வயதாகும் நிலையில் இவருக்கு ஜெயபிரகாஷ் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், திருச்செங்கோட்டில் எக்ஸ்பிரஸ் கொரியரை நடத்தி வரும் இவர்கள் அங்கேயே ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர்.
ரேஷன் பொருட்கள் வாங்க வருகை :
ஜெயபிரகாஷுக்கும், புவனேஸ்வரிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் கணவனிடம் கோபித்துக் கொண்ட புவனேஸ்வரி சங்ககிரியில் அமைந்துள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 21 இல் ரேஷன் பொருட்கள் வாங்க வெட்டுக்காடு கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்து இரவு புவனேஸ்வரி தங்கியுள்ளார்.
மாமனாரின் தகாத செயல் :
நள்ளிரவு நேரம் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாமனார் ராஜி, தூக்கத்தில் இருந்த மருமகள் புவனேஸ்வரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை புவனேஸ்வரி தன்னுடைய கணவர் மற்றும் தாயிடம் தெரிவித்து இருக்கின்றார். தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனி்ற்கு சென்று மாமனார் ராஜி மீது புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் அதிரடி நடவடிக்கை :
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாமனார் ராஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையாக இருந்து மருமகளை பாதுகாக்க வேண்டிய மாமனாரே இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.