96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தான் பெற்ற குழந்தையை 1 லட்சத்திற்கு விற்ற இவரெல்லாம் ஒரு தந்தையா? வெளியான அதிரவைக்கும் காரணம்.!
நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ்.இவரது மனைவி பிரமேலதா .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ், குழந்தையை வளர்க்க ஆர்வம் இல்லாமல் திருச்சியை சேர்ந்த தனது உறவினர் வெள்ளையம்மாள் என்பவரை தொடர்பு கொண்டு, பெண் குழந்தையை விற்று தரும்படி கேட்டுள்ளார்.
பின்னர் வெள்ளையம்மாள் துறையூரை சேர்ந்த சகுந்தலா தேவி என்பவரிடம் இது குறித்து பேசி, குழந்தையை ரூ. 1 லட்சத்திற்கு விற்றுவிட்டார்.
இந்த விவகாரம் திருச்சி குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதற்கு பிறகு துறையூருக்கு வந்த போலீசார் சகுந்தலாவிடமிருந்து குழந்தையை மீட்டனர்.
மேலும் குழந்தையின் பெற்றோர், குழந்தையை விற்ற வெள்ளையம்மாள், குழந்தையை வாங்கிய சகுந்தலா ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.