மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11 மாத குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க மறுத்த தந்தை; நீதிபதிகளின் அதிரடி தீர்ப்பு..!
சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்தனர். அதில் மனைவி, திருச்சியில் உள்ள தன் பெற்றோரின் வீட்டில் 11 மாதகுழந்தையுடன் தங்கியிருப்பதால், விவாகரத்து வழக்கிற்காக குழந்தையை வைத்துக்கொண்டு பயணம் செய்ய முடியவில்லை.
இதனால் திருச்சி நீதிமன்றத்திற்கு விவாகரத்து வழக்கை மாற்றித்தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அவர்களுடைய அமர்வு, 11 மாத குழந்தைக்கு கணவர் ஜீவனாம்சம் தருகிறாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு இல்லை என மனைவி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி கணவனிடம் கேட்டதற்கு, "குழந்தையை பார்ப்பதற்கு கூட எனக்கு மனைவி அனுமதி கொடுக்கவில்லை. அதனால் நான் ஏன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மனைவி ஒரு பல் மருத்துவராக இருக்கிறார். அவர் வழக்கிற்காக பூந்தமல்லி வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்றும் கூறியிருக்கிறார்.
இந்த இரு தரப்பு விவாதங்களையும் விசாரித்த நீதிபதி, "குழந்தைக்கு தேவைப்படும் செலவுகள் மற்றும் குழந்தையின் படிப்பை உறுதிசெய்வது தந்தையின் கடமை. கணவனிடம் விவாகரத்து பெற்று மனைவி அவரது பெற்றோர்களுடன் தங்கி விடுவதால், அந்த பெண் பிள்ளையை பெற்றவர்களின் பெற்றோர்களுக்கு அதிக கடமை மற்றும் சுமை கூடுகிறது. இது வேதனை அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
மேலும், "ஜீவனாம்சம் வேண்டி மனைவி தரப்பில் மனுதாக்கல் செய்யாவிட்டாலும், அந்த ஜீவனாம்சத்தை பெற்று தர வேண்டிய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. தன்னுடைய கடமையிலிருந்து குழந்தையின் அப்பா தப்பிப்பதை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது.
குழந்தையை பார்க்க மனைவி தரப்பில் அனுமதிக்க வில்லை என்றாலும், குழந்தைக்கு வேண்டிய செலவுக்கான பணத்தை கொடுக்க வேண்டியது அப்பாவின் கடமை. இந்த விவாகரத்து தொடர்பான வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றியும், மாதம் குழந்தைக்கு 5 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சமாக குழந்தையின் அப்பா கொடுக்க வேண்டும்" என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.