53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சாலையில் சென்ற லாரி.. திடீரென முன்பகுதியில் புகைவந்ததால் பதறிய ஓட்டுநர்..! அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!!
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளைக்கு ஆலோ பிளாக் கற்கள் ஏற்றிக்கொண்ட லாரியானது சென்னை-செங்கல்பட்டு சாலையில் உள்ள வில்லியம்பாக்கம் அருகே நேற்றிரவில் பயணம் செய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்து கொள்ளவே, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இதற்குள்ளாக லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து ஓட்டுனர் மகிமை தாஸ் இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.