திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு..!! கோவில் திருவிழாவில் பரபரப்பு..!!
நங்கநல்லூர் கோவில் திருவிழாவில் ஐந்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் அமைந்துள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 25-க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி நீராட்டிய போது ஒரு அர்ச்சகர் குளத்தில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
காவல்துறையினர், அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராகவன், லோகேஷ்வரன், பானேஷ், சூர்யா என்ற அர்ச்சகர்கள் ஐந்து பேரும் தன்னார்வலர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவில் திருவிழாவில் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நங்கநல்லூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.