"இன்னைக்கி மழை மட்டும் பெஞ்சிருக்கணும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு.!



Former AIADMK Minister Jayakumar about CHennai Rains 2024 Oct 16 

 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திரா - சென்னை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்த நிலையில், அவை மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, அரசு நிர்வாகத்தின் தோல்வியே வெள்ளத்தில் தலைநகர் சிக்குவதற்கு காரணம் என விமர்சனம் செய்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, 

இதையும் படிங்க: #Breaking: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி -மருத்துவமனையில் அனுமதி.!

AIADMK

இயற்கை மக்கள் பக்கம்

"இயற்கை மக்களின் பக்கம் இருந்ததால், மக்கள் தப்பித்தார்கள். இயற்கை கொஞ்சம் ஆவேசமாக இருந்தால், நிலைமை தலைகீழாகியிருக்கும். பல இடங்களில் இன்னும் சென்னையில் தேங்கியுள்ளது, கழிவுநீர் கலந்துள்ளது. கழிவுநீரும், கால்வாயும் இணைந்து தெருவெல்லாம் சாக்கடை நீராகிவிட்டது. இயற்கையை பொறுத்தவரையில் மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் வேண்டுவோம். மழையும் வேண்டும், அது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களை போலவே இன்றும் மழை பெய்திருந்தால் நிலைமை தெரிந்திருக்கும். 

மக்களின் கஷ்டங்களை நாங்கள் எடுத்துகொள்வோம். கஷ்டமான சூழலை வைத்து நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். ஆளுநர் மழை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்தில் இருந்தே ஆளுநரும், திமுகவும் இணைந்துவிட்டது உறுதியாகியுள்ளது. முதலில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தற்போது டெல்லிக்கு சென்று பேசிவிட்டு, தற்போது ஆளுநர் வாழ்க என கோஷம்போடுகிறார்கள். அரசு நிர்வாகத்தின் தோல்வியே வெள்ளத்திற்கான காரணம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: #Breaking: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி -மருத்துவமனையில் அனுமதி.!