மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்; முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில natkalgave பாஜக மீது திமுகவம், திமுக மீது பாஜகவும் ஊழல் குற்றசாட்டுகளை மாறி மாறி சுமத்தி வருகிறது. அண்ணாமலை ஏப்ரல் மாதம் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்து இருக்கிறார். திமுக தரப்பில் அண்ணாமலையின் வாட்ச் இலட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கப்பட்டது என விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், "அண்ணாமலை தனது வாட்ச் விவகாரம் குறித்து தெளிவுபடுத்தி, வாட்சின் விலை ரூ.5 இலட்சம், அதற்கான ஆதாரத்தை தருகிறேன் என தெரிவித்துவிட்டார். எனது வாட்ச் ரூ.10 ஆயிரம் தான்.
அதே நேரத்தில், மு.க ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஆகியோரை எடுத்துக்கொண்டால், அவர்களின் வாட்ச் விலை எவ்வுளவு என கூற இயலுமா?. ஒருஒருநாளும் அவர்கள் எந்தெந்த வாட்ச் அணிவிக்கின்றனர் என ஊடகங்கள் வெளியிடுமா?.
எங்களின் வேஷ்டி, சட்டை, பேனா, வாட்ச் என அனைத்துமே ரூ.25 ஆயிரத்திற்கும் வந்துவிடும். மு.க ஸ்டாலின் சட்டை, கைக்கடிகாரம் போன்றவற்றை மதிப்பிட்டால் நடமாடும் வங்கியை போல இருப்பார். பாஜக தோழமையுடன், நட்புடன் இருக்கிறது. இதனை நாங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்" என்று பேசினார்.