திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிமுக திமுகவுடன் இணைகிறதா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.!
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளினை முன்னிட்டு, மதுரை கே.கே நகர் பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கப்ட்டுள்ளார்கள். அதிமுக என்ற இயக்கம் திமுகவுடன் இணைந்துவிடும் என ஐ. பெரியசாமி கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அதிமுகவின் தோல்விக்கான காரணம் தொடர்பாக பேசி முடிவுகள் எடுக்கப்படும்.
அதிமுகவுடைய வாக்கு வங்கி என்பது குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்குகளை செலுத்த வரவில்லை. அதுவே அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகும்" என்று தெரிவித்தார்.