மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Breaking: தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரானதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் உலகம் முழுவதும் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்துவருகிறது. இதில் ஒருசில ஆய்வுகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரானதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசின் இந்த முடிவு இன்று வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக பீகாரில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக "அனைவருக்கும் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசி" என்ற வாக்குறுதி வந்ததை அடுத்து தமிழக முதல்வரின் "இலவச கோவிட் -19 தடுப்பூசி" வாக்குறுதி வந்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார், அந்த அறிக்கையில் இலவச கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.