மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிக்க பணம் கேட்டதால் நண்பரை குத்தி கொலை செய்த நபர்.!
சென்னை வேளச்சேரி அருகே மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் பழைய இரும்புகடையில் வேலை செய்து வந்துள்ளார். இதில், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் வயது 28 என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மனோகரன் வேலை செய்யும் கடையில் விற்று வந்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திய மனோகரன் கண்ணன் தரும் பொருட்களுக்கு சில சமயங்களில் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கோவிலம்பாக்கம் பகுதியில் மனோகரன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை ஓரத்தில் கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை எழுப்பி மது அருந்த கண்ணனிடம் மனோகரன் படம் கேட்டுள்ளார். ஏற்கனவே பழைய பொருட்களை விற்றதற்கான பணம் தராமல் மனோகரன் ஏமாற்றி வந்ததும் தற்போது தன்னிடமே குடிக்க பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கண்ணன் கீழே கிடந்த மது பாட்டிலை உடைத்து மனோகரனின் வயிற்றில் சரமரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மனோகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மனோகரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மனோகரனின் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.