மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊரடங்கு நேரத்தில் டிப்டாப் மேக்கப்.., பட்டுச்சேலை, கழுத்து நிறைய நகைகள்.! தம்பதி கூறிய காரணம்.! பதறி ஓடவைத்த போலீசார்.!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் போலீசார், கடலூர் அண்ணா பாலம் அருகே சோதனைச் சாவடி அமைத்து நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது ஒரு கார் ஒன்று சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்றுள்ளது. இந்த காரில் ஐந்து பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அந்த காரை வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காரில் பயணித்த ஒருவர் தனது மனைவியின் சிகிச்சைக்காக புதுச்சேரியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் காரில் இருந்த அந்த பெண் பட்டுப்புடவை அணிந்து நிறைய நகைகள் போட்டு கொண்டு காணப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக கூறிய தம்பதிகளை போலீசார் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் ஆம்புலன்ஸ் புறப்படவிருந்த நேரத்தில், நாங்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை சொந்த வேலையாகத்தான் வந்தோம். எங்களை மன்னித்து விட்டுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து திருப்பி வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.