மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பஸ் ஸ்டாண்டில் புகுந்து கல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல்: வைரலான வீடியோவால் பரபப்பான போலீஸ்..!
தென்காசி மாவட்டம், சுரண்டை பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, கல்லூரி நேரம் முடிந்து வீடு திரும்ப அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் காத்திருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு கும்பல் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களை தாக்கியது.
எதிர்பாராத நேரத்தில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த கும்பல் மாணவர்களை குறிவைத்து சரமாரியாக அடித்து உதைத்த பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து தப்பிச்சென்று விட்டது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைனை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களை கும்பல் தாக்குவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதால் அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல் நிலைய ஆய்வாளர் சுதந்திரா தேவி விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அந்த பதிவுகளில் 5 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவர்களை தாக்கிய காட்சி பதிவாகி இருந்தது. எதற்காக கல்லூரி மாணவர்களை தாக்கினார்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.