மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணை தாக்கி செல்போன், டூ வீலர் பறிப்பு.. நடுரோட்டில் பகீர் சம்பவம்., குற்றவாளிக்கு காலில் மாவுக்கட்டு.!
கஞ்சா, மதுபோதையில் திரிந்த ஆசாமி கல்லூரி பேராசிரியையை கொலை செய்ய முயற்சித்த நிலையில், காவல் துறையினர் பிடிக்க சென்றபோது கால்களை முறித்துக்கொண்டு கைதானார்.
திருச்சி மாவட்டம் கேலக்சி டவர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். மனைவி சீதாலட்சுமி (வயது 53). இவர் திருச்சி அண்ணா பல்கலை.,யில் பேராசிரியை, துறை தலைவராக பணியாற்றி வருகிறார். திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தினமும் இவர் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.
சம்பவத்தன்று கடந்த 12ம் தேதி மாலையில் நடைப்பயிற்சி நிறைவடைந்ததும் வீட்டிற்கு வர இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற சமயத்தில், அங்கிருந்த கஞ்சா போதை ஆசாமி மரக்கட்டையால் அவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனம், செல்போனை பறித்து சென்றார்.
மயங்கி கிடந்த ஆசிரியையை தரதரவென இழுத்து ஓரத்தில் கிடத்தி கொள்ளையன் அங்கிருந்து சென்றுள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர் பேராசிரியை கண்டோமென்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி தாராநல்லூரில் வசித்து வந்தவரை கைது செய்ய சென்றனர்.
அப்போது, கொள்ளையன் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தில் தப்பி சென்றபோது, வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்து கால்களை உடைத்துக்கொண்டார்.
அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தபின் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி பழமனேரி கிராமத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது. அவரிடம் இருந்து பேராசிரியையின் இருசக்கர வாகனம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.