96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிலிண்டரில் இருந்து லீக் ஆகி கடை முழுவதும் பரவிய கியாஸ்.! அதிகாலையில் அடுப்பை பற்றவைத்த கடைக்காரர்.! அதிர்ச்சி சம்பவம்.!
கேரளாவை சேர்ந்த மோகன் என்பவர் சென்னை கிண்டி அருகே தங்கி, டீ கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை மோகன் வழக்கம்போல் அவரது டீ கடையை திறந்தார். அப்போது டீ போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார்.
ஆனால் அடுப்பை பற்ற வைத்த உடனே கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த மோகன் வலி தாங்கமுடியாமல் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து மோகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மோகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடை முழுவதும் கியாஸ் லீக் ஆகி கடை முழுவதும் பரவி இருந்துள்ளது. இதை அறியாமல் மோகன், அடுப்பை பற்ற வைத்தபோது, கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது.