மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனை பிடுங்கிய அப்பா.! மாடியிலிருந்து குதிப்பதாக மிரட்டிய சிறுமி.! பின் நடந்தது என்ன? பரபரப்பு சம்பவம்!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். ஆட்டோ ஓட்டுனரான அவரது மகள் காவியா ஸ்ரீ. 17 வயது நிறைந்த அவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு காலேஜ் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவர் அதிகளவில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சிறுமியிடமிருந்து செல்போனை பறித்துள்ளார். இந்நிலையில் தனக்கு செல்போன் வேண்டும் என்று அடம்பிடித்த அந்த சிறுமி தனது தந்தையை மிரட்டும் வகையில் இரண்டு தளங்கள் கொண்ட வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதிக்கப்போவதாக கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை சமாதானபடுத்தும் வகையில் பேசியும் அவர் கேட்க மறுத்துள்ளார். அப்பொழுது பெண் காவல் ஆய்வாளர் அன்னக்கிளி என்பவர் சிறுமியிடம் பேசியவாறே அவரது அருகில் சென்றுள்ளார்.
உடனே சிறுமி மாடியிலிருந்து குதிக்க முயன்றுள்ளார். இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த பெண் காவல் ஆய்வாளர் பாய்ந்து சென்று சிறுமியை பிடித்து காப்பாற்றியுள்ளார். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஏறக்குறைய ஒரு மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.