திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலுக்கு எதிர்ப்பு.. மகளின் காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தினர்!
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்த 28 வயதான கார்த்திக் என்ற இளைஞர் சுமை தூக்கும் பணி செய்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான மணி என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனையும் மீறி காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனால் அந்த பெண்ணின் தந்தையும், சகோதரரும் ஆத்திரமடைந்தனர். இதனையடுத்து தனது மகளின் காதலனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கை, காதலியின் தந்தை மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.