மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தா சொன்னார்.. நான் செய்தேன்! விளம்பரத்திற்காக பெண் சாமியார் செய்த காரியம்! அதிரடியாக கைதுசெய்த போலீசார்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருக்கும் வெள்ளரி அம்மன் கோவிலை நிர்வகித்து வருபவர் கபிலா. இவர் செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார்.
மேலும் கோவிலில் தட்டுகளில் பாம்புகளை வைத்து அவற்றிற்கு பாலாபிஷேகம் செய்து மலர் தூவி தீபாராதனை செய்யும் சர்ப்ப சாந்தி பூஜை என்னும் நாக பூஜையும் செய்து வந்துள்ளார். மேலும் அம்மனை போல வேடமணிந்து தனக்கு அருள் வந்ததாக கூறி பாம்பைக் கழுத்தில் அணிந்துகொண்டும் மக்களை பரவசமூட்டி அருள்வாக்கு அளித்து வந்துள்ளார்.
மேலும் சமீபகாலமாக யாரும் பெருமளவில் குறிகேட்க வராத நிலையில் நாகபூஜைகளை வீடியோவாக எடுத்த கபிலா அதனை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ வைரலான நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிரிஜாலாவுக்கு உத்தரவின்படி செங்கல்பட்டு வனத்துறை கபிலாவிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பாம்புகளை வீடுகளில் வளர்ப்பது, அதை வைத்து வித்தை காட்டுவது போன்றவை குற்றச் செயல்கள். மேலும் நல்ல பாம்பை காட்சிப்படுத்தியது குற்றம் என்று கூறி கபிலா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.