திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருவிழா உணவு சாப்பிட்ட குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.! நடந்த பகீர் சம்பவம்..!!
திருவிழாவில் கலந்துகொண்ட மறுநாள் வயிற்றுப்போக்கால் சிறுமி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் காரப்பட்டு பகுதியை சார்ந்தவர் காமராஜர். இவர் தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். காமராஜரின் மனைவி மாலதி. இந்த தம்பதிகளுக்கு பூமிகா, ஜோதிகா மற்றும் காமாட்சி (வயது 11) என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
இவர்களில் காமாட்சி அங்குள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாலதியின் தாய் வீட்டில் திருவிழா நடைபெற இருந்ததால், காமராஜ் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். அப்போது மாலதியின் தாய் வீட்டில் சமைத்த உணவுகளை அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்களின் வீட்டிற்கு வந்த நிலையில், அப்போது முதல் காமராஜ்க்கும், அவரது மூன்று மகள்களுக்கும் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபக உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயிற்றுப்போக்கால் சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.