ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இளம்பெண்ளை மிரட்டி பாலியல் வன்கொடுமை! அத்துமீறும் காமகொடூரர்கள்! ராமநாதபுரத்தில் பேரதிர்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே சாலையில் இளம் பெண் ஒருவர் அவரது உறவினரிடம் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்றது. அதனை தொடர்ந்து அப்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற அவர்கள், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததோடு, மிரட்டி அவரிடம் இருந்த பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளனர். பின்னர் அவரை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர் இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டதை தொடர்ந்து, முகமது சீதக்காதி, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், அரவிந்த், காளிதாஸ் ஆகிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள், கணவரை பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் தவறான தொடர்பில் இருக்கும் பெண்கள் ஆகியோரை குறிவைத்து தனது வலையில் சிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும் அவர்களை ஆபாச வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இவர்கள் ராமநாதபுரம் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் மயில், முயல் போன்ற விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி உள்ளனர். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்திய நிலையில் போதை தலைக்கேறியதும் அவர்களிடம் சிக்கியுள்ள பெண்களை மிரட்டி வரவழைத்து 6 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.