மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜல்லிக்கட்டு வீரருக்கு எதற்கு கார் பரிசு?? இதை கொடுங்க.! ஐடியா கொடுத்த பாமக தலைவர் அன்புமணி!!
தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் வகையில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவற்றிலும் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றவை.
இந்நிலையில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை, காளைகளை அடக்கும் வீரரருக்கு முதல் பரிசாக கார் மற்றும் இரண்டாவது பரிசாக பைக் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,தை மாதம் வந்தாலே நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரருக்கு தமிழக அரசு காரை பரிசாக அறிவித்துள்ளது. காரை வைத்துக்கொண்டு மாடுபிடி வீரர் என்ன செய்யப்போகிறார். விவசாயியான அவருக்கு காருக்கு பதிலாக கலப்பையுடன் கூடிய நல்ல டிராக்டரை முதல் பரிசாக அளிக்க வேண்டும். அந்த டிராக்டரை ஓட்டி அந்த நபர் சம்பாதிப்பார். இல்லையென்றால் வாடகைக்கு விட்டாவது சம்பாதித்து வருமானம் பெறலாம். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு விவசாயத்திற்கு பயன்படும் பொருட்களை பரிசாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.