திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆடு மேய்க்க சென்ற பெண் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக சடலம்!
தஞ்சாவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ள மனையேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் தினமும் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அதன்படி நேற்றும் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டி சென்ற அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடிச் சென்றுள்ளனர். அப்போதே அந்த பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரங்கள் மட்டும் கீழே கிடந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அருகில் தீவிரமாக தேடிய பொழுது, அந்தப் பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.