மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தங்கத்தின் விலை உயர்வு... இன்று சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு...!!
இந்த வாரத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ.5,390க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில வாரம் திடீரென்று உயர்வதும், சில வாரம் திடீரென்று குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது.
நேற்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் ரூ.5,325-க்கு விற்கப்பட்ட தங்கம். இன்று ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.5,390க்கு விற்கப்படுகிறது.
இதே போல் இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.