மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்த அரசுப்பேருந்து... அதிர்ச்சியில் பயணிகள்!!
சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தானது திடீரென சாலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். நேற்று மதியம் சேலத்தில் இருந்து புறப்பட்டு கோவை நோக்கி 67 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தானது சென்றுள்ளது.
இந்நிலையில் சரியாக மாலை 4 மணியளவில் பேருந்தானது கருமத்தம்பட்டி அருகே நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்புறத்திலிருந்து புகையாக வந்துள்ளது. அதனை அடுத்து பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் கீழே இறங்கி பார்த்துள்ளனர். அப்போது திடீரென தீ ஏற்பட்டதை அடுத்து உடனே பயணிகளை பத்திரமாக கீழே இறக்கி உள்ளனர்.
இதனால் உயிர் தேசம் ஏதும் ஏற்படவில்லை. உடனே இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி எரிந்து பேருந்தானது கரிகட்டையாக காட்சியளித்தது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.