ரூ. 258 கோடிக்கான பொங்கல் பரிசு! சற்றுமுன் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!



Government order released for 258 corers pongal prize

தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் முதல் நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தாங்கள் செய்யும் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் வருணபகவான் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசினால் ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு பொங்கல் பொருட்கள் இலவசமாக பொங்கல் பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

pongal prize

மேலும் பொங்கல் பரிசானது தமிழகத்தைச் சார்ந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் குடியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.258 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசனை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.53.61 கோடி சர்கரைக்கும், ரூ.80.76 கோடி கரும்பிற்கும், ரூ. 30.29 கோடி முந்திரி மற்றும் திராட்சைக்கும், ரூ.60.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.