மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்...போக்சோவில் கைது செய்த போலீசார்..!!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, உள்ள பெரியம்மா பாளையம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம், ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் செல்வகுமார், தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
ஆசிரியர் செல்வக்குமாரை காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் மீது பெரம்பலூர் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.