திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரும் துயரம்.. பெற்றோரின் கவன குறைவால் அநியாயமாக பறிபோன சிறுவனின் உயிர்.!
பிகாா் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான ரோஷந்த்குமார் சென்னை அருகே பெருங்குடியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் அதே கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரோஷந்த்குமாரின் மகன் ஆதித்குமார்(6) புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஆதித்குமார் அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதித்குமாரின் பெற்றோர் காயமடைந்த சிறுவனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு ஆதித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டாவது மாடியிலிருந்து சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.