மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்.. காய வைத்த துணியை எடுக்க முயன்ற நபருக்கு ஏற்பட்ட சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார். விவசாய தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விவசாய தொழிலாளியான குமார் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள போர் செட்டில் குளித்துவிட்டு அங்குள்ள இரும்பு கம்பியில் துணியை காய வைத்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மறுநாள் காலை அவ்வழியாக வேலைக்கு செல்லும் போது இரும்பு கம்பியில் காய போட்டிருந்த துணிகளை குமார் எடுக்க வந்துள்ளார். அப்போது மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு குமார் காயப் போட்டிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத குமார் துணி எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.