கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கல்யாணப் பந்தியில் Cool Lip விநியோகம்.. ஐயாத்துரை பேக்ரவுண்ட் மியூசிக்கில் இளைஞர்கள் அட்ராசிட்டி.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?..!
போதைப் பொருள் உபயோகம் என்பது இந்தியாவில் இளைஞர்களுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் புற்றுநோய் ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் தங்களின் வாழ்நாட்களை இழந்து தனிமரமாக தவித்து வருகின்றனர்.
இளைஞர்கள் போதை பொருளை உபயோக ப்படுத்த கூடாது என அரசு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறது. திரைப்படங்களில் சிகரெட் புகை, மது, போதைப் பொருட்கள் போன்றவை உபயோகப்படுத்தும் போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாசகமும் இடம்பெற வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், சில இளைஞர்கள் ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, இளைஞர் ஒருவர் அவர்களுக்கு தலைவாழை இலையில் கூலிப் எனப்படும் போதை பொருளை ஆளுக்கு ஒன்று என பிரித்துக் கொடுக்கிறார்.
இதனை வீடியோ எடுத்து அவர் தனது சமூக வலைதளத்திலும் பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: நமது பக்கத்தில் வீடியோ இணைக்கப்படவில்லை..
போதைப்பொருள் பயன்படுத்துதல் உடல் நலத்தை சீரழிக்கும், எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும், உயிரிழப்பை ஏற்படுத்தும்..