திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பொங்கல் பரிசு பைகளில் எழுதப்பட்ட வசனம்.! திமுக திருந்தாது... திடீரென கொந்தளித்த எச்.ராஜா.!
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நாள் குறித்த விவாதம் கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. 2006-11 வரையிலான திமுக அரசில் தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்பதற்கு வழிவகுத்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் "இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்பும்.
— H Raja (@HRajaBJP) December 2, 2021
இது தொடர்பாக எச். ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், "திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.