திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மோடியை கிண்டல் செய்த பா.சிதம்பரம்.! திஹார் ஜெயிலை நினைவு படுத்திய எச்.ராஜா.! காரசார பதிலடி.!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடிக்கும் வகையில் புகழ்வது போல இகழ்ந்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "மேற்கு வங்கத்தை எப்படியாவது கைப்பற்றி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க நடத்தும் போராட்டத்திற்கு மத்தியில், கொரோனா நெருக்கடியை சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் செலவிட்டுள்ளார். இதற்காக அவருக்கு என் நன்றி." என பா சிதம்பரம் பதிவிட்டிருந்தார்.
தாங்களும் தங்கள் குடும்பமும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் போராட்டத்திற்கு (106 நாள் திஹார் அனுபவம் நினைவிருக்கும்) இடையில் காரைக்குடி தொகுதிக்கு நேரம் ஒதுக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனராமே. pic.twitter.com/a1B40YcEuE
— H Raja (@HRajaBJP) April 19, 2021
இவரின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "தாங்களும் தங்கள் குடும்பமும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் போராட்டத்திற்கு (106 நாள் திஹார் அனுபவம் நினைவிருக்கும்) இடையில் காரைக்குடி தொகுதிக்கு நேரம் ஒதுக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனராமே." என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது .