மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு நான் ஜோடியா? அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் பதிவு!
சென்னையில் உள்ள பிரபல கடைகளில் ஒன்றாக சரவணா ஸ்டோர் பல வருடங்களாக இயங்கி வருகிறது. சென்னையில் பல இடங்களில் பல்வேறு கிளைகள் உருவாகிவிட்டது. இதில் முக்கியமான ஒன்று தான் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர். இதன் உரிமையாளர் தான் சரவணன் அருள். இவர் கடை விளம்பரத்திற்காக சினிமா ஸ்டார்களுடன் நடனமாடி குறுகிய காலத்தில் நடிகர்களுக்கு நிகராக ரீச் ஆனார்.
இவர் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு விளம்பர பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவியது. தற்போது அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
NOT TRUE ! ❎ pic.twitter.com/uY0jq5OH8q
— Hansika (@ihansika) October 2, 2019
அவருடன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேசி வந்ததாகவும் இறுதியில் ஹன்சிகா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது. இந்நிலையில் இந்த தகவலை ஹன்சிகா மறுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த தகவல் வைரலான நிலையில் இந்த செய்தியை பார்த்த ஹன்சிகா அதிர்ச்சியுடன் இது உண்மை இல்லை என கூறி அந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.