அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அரசாணை வெளியீடு.!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, ஜனவரி 1 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும், 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.