மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளி எடுத்த விபரீத முடிவு!
திண்டுக்கல் மாவட்டம் ஏபி நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவரும் இதே கடந்த 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மாலை திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்து ஷாஜகான் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக வந்த போது திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.