திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 வருடமாக என்னுடன் வாழ்ந்து விட்டு இப்போது என்னை ஏமாற்றுகிறார்... மதபோதகர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!!
திருமணம் செய்து கொள்வதாகக் சொல்லி பத்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு தற்போது ஏமாற்றுவதாக மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் மதபோதகர் மீது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி, கலெக்டர் அலுவலகத்தில், மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த வர்ணிகா என்பவர், மதபோதகர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்து தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் மத போதகர் சாமுவேல் தனக்கு தெரியாமல் சென்னையைச் சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்றும், தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது பற்ங கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றுகிறார். நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்.
மேலும் சாமுவேல் தன்னை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து வைத்து கொண்டு தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார் எனவும், அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
குடும்ப கஷ்டம் என சொல்லி ரூ.2 லட்சம் வரை தன்னிடம் வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் அவரது உறவினரான முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற பல சம்பவங்களின் காரணமாக தற்கொலை முயற்சி செய்த என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். என்னை போல் இனி வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றும், ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.