மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்டெர்னல் மார்க்ல கைவைப்பேன்; மிரட்டி மாணவிகளை பணிய வைத்த ஹெச்.எம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.! அதிரவைக்கும் பின்னணி..!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தலைமையாசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஓமலூர் அருகேயுள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதுடன், வெளியில் சொன்னால் இன்டெர்னல் மார்க்கை குறைத்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தலைமையாரிசியரின் அத்துமீறலை மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இவர்களில் ஒரு மாணவி மட்டும் தைரியமாக ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்த தகவலை அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோர்களிடம் பகிர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், தலைமையாசிரியர் விஜயகுமாரை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு பள்ளியின் தலைமையாசிரியரே இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்ட விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.